Wednesday, 25 December 2013

                       திரு இந்தளூர்  பரிமள ரெங்கநாதர்
            
           108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும் பஞ்சரங்க தலங்களில் ஒன்றானதுமான திருஇந்ததளூர்
பரிமள ரெங்கநாதர்  திருக்கோயில் மயிலாடுதுறை பேரூந்து நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.   கிழக்கு நோக்கிய திருக்கோயில் இத்திருக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டடு பல்வேறு அரசர்களால் அவ்வவ்போது புதுப்பிகபட்டுவந்துள்ளது விமானம் வேதசக்ரவிமானம்.   தீர்த்தம். இந்து புஷ்ஹரிணி .பெருமாளின் திருநாமம் சுகுந்த  வனநாதர் என்னும் பரிமள ரெங்கநாதர் .தாயார் சுகுந்தவனநாயகி என்னும் பரிமளரெங்கநாயகி .திருமங்கையாழ்வார் இத்திருதல பெருமாளை பதினொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் .

​​​​​​​​ தலவரலாறு :

   உலகில் படைப்பு தொழிலை மேற்கொள்வதற்காக திருமாலால் பிர்மதேவனுக்கு வழங்கப்பட்ட வேதங்களை அசுரர்கள் அபகரித்து சென்று கடலலுக்கடியில் மறைத்து வைத்தனர் .பிர்மதேவன் திருமாலிடம் சென்று முறையிட்டார் . திருமால் அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார் .கடலுக்கடியில் மறைத்து வைகபட்டிருந்ததால் தாங்கள் முழுமையாக இல்லை எனவும் தங்களை சீர்செய்யும்படிவேதங்கள்  திருமாலிடம் வேண்டின .திருமாலும் வேதங்களை சீர்செய்து
நறுமணம் வீசசெய்து பிர்மதேவனிடம் கொடுத்தார் .  ஆதலால் இத்தலத்திற்கு சுகந்தவனம்  என்னும் பெயர் ஏற்பட்டது .


காவிரி நதிநதிக்கு அருள் பாலித்தது :
 
     புண்ணிய நதிகளில் தனக்கு முதலிடம் வேண்டுமென காவிரிநதி திருமாலிடம் வேண்ட , அவரும்  காவிரிக்கு அருள்புரிந்து  தான் காவிரி கரையில் ஐந்து இடங்களில் எழுந்தருளுவதாகவும் கூறினார் .தான் கடைசியாக எழுந்தருளும் சுகுந்தவன தலத்தில் துலாமாதத்தில் மற்ற புண்ணிய நதிகள் உன்னிடம் நீராடி தங்களுது பாவங்களை போக்கிகொள்ளும் என்றார் .அதன் நினைவாக இன்றளவும் துலா மாதத்தில் பெருமாள் தினசரி காவிரி கரைக்கு சென்று அருள் புரிவது மிகச் சிறப்பாகும் .தொண்டரடிபொடியாழ்வார் தனது திருமாலையில் கங்கையைவிட காவிரியே புணிதமாணவள் என போற்றுகிறார் .

       நவகோள்களில் ஒன்றான சந்திரன் இத்தல  பெருமாளை வணங்கி சாபவிமோசனம் பெற்றார்  என்பது சிறப்பு .இத்தலத்தில்  பெருமாள் நான்கு கரங்குளுடன் சயனித்த கோலத்தில் உள்ளார்.   கருவறையில் பெருமாளின் தென்புறம் காவிரி நதியும் வடபுறம் கங்கையும் பாதத்தின் அருகில் சந்திரனும் எழுந்தருளிக்கின்றனர்.  காவிரிக்கு முதலிடத்தை வழங்கியவரும் ,வேதங்களை நறுமணம் வீசசெய்தவருமான பெருமாளை நாமும் தரிசித்து அருள் பெறலாமே

Tuesday, 24 December 2013

                                        பெரியமறை  ஸ்ரீனிவாச  பெருமாள்


தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 15 கி மீ  தொலைவிலும் அரியலூர்  மாவட்டம்  திருமனூரில் இருந்து 10 கி மீ தொலைவில் உள்ளது பெரியமறை . வைணவ ஆச்சாரியரான  ஆளவந்தார் சோழ மன்னன்  பரிசாக கொடுத்த பாதி
தேசத்தில் வைணவ சாம்ராஜ்யத்தை நிறுவினார் .அவர் அரசராக இருந்த போது நிர்மாணிக்கபட்டது  தான்  இத் திருக்கோயில் .இவ்வாலயத்தின் சிறப்பு
திருமலையில் உற்சவராக இருக்கும்  ஸ்ரீனிவாசன் இவ்வாலயத்தில் மூலவராக காட்சி அளிக்கிறார் .திருமலையில் மூலவராக காட்சி தரும் வேங்கடவன் இவ்வாலயத்தில்  பிரசன்ன வெங்கடாசலபதி  என்னும் திருநாமத்துடன்  உற்சவராக  காட்சி தருகிறார் . வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலம் .பதவி உயர்வு ,மற்றும் வேலை வாய்ப்பு வேண்டுவோர் தரிசிக்கவேண்டிய  திருத்தலம் பெரியமறை .
                                          நவக்கிரக  ஆஞ்சநேயர்

  தஞ்சை மாவட்டம்  சுவாமிமலையில் இருந்து  6 கி மீ தொலைவில் உள்ளது  ஆதனூர் .108 வைணவ திருதலங்களில் ஒன்று இவ் ஊரின் எல்லையிலேயே உள்ளது நவக்கிரக ஆஞ்சநேயர் திருக்கோயில் .இவ் ஆஞ்சநேயருக்கு வாலில் 27 முடிச்சுகள் உள்ளன .அவை 27 நட்சத்திரங்களை  குறிக்கும் .இடுப்பு ஒட்டியனத்தில் 9 முடிச்சுகள்  உள்ளன  அவை நவக்கிரகங்களை  குறிக்கின்றன . இந்த ஆஞ்சநேயரை  ஒரு முறை தரிசித்தாலே கிரக தோஷங்கள் நம்மைவிட்டு நீங்கும் .
                                        ஜய மங்கள ஆஞ்சநேயர்


புதுவை மாநிலம்  காரைக்கால் பகுதியில் உள்ளது கோட்டுச்சேரி .இங்கு உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளி இருக்கிறார் ஜய மங்கள ஆஞ்சநேயர் .இவரை வியாழ கிழமை களில் வணங்கிவர எல்லா காரியங்களிலும்  வெற்றி கிடைக்கும்